எளிமை, நேர்மை, உண்மை
இவை வெறும் வார்த்தைகள் அன்று - நீர்
வாழ்ந்துக் காட்டிய வாழ்க்கை நெறிகள்.!!!
பணிகள் செய்ய நீ சளைத்ததும் இல்லை
என்றும் களைத்ததும் இல்லை
தெரியாத ஒன்றை அறிய முயல்வீர்!
தெரிந்த ஒன்றை பிறருக்கு புரிய வைக்க முயல்வீர்!!
வேலையின் இடைவேளையில்
அவசரஅவசரமாய் தலைப்புச் செய்திகளை
வாசித்ததுண்டு - இனிமேல்
அந்த ஓட்டம் வேண்டாம் - ஆம்
அடி முதல் நுனி வரை
ஒவ்வொரு வார்த்தைகளாகவும்
வண்ணப் படங்களின் வாயிலாகவும்
நுண்ணறிந்து செய்திகளை வாசிப்பது மட்டுமல்ல
இனி தாள்களை சுவாசிக்கவும் செய்வாயே...!!!
உங்களிடம் சற்றே வேகம் குறைவு - ஆம்
மறுப்பதற்கு அன்று
பேச்சில் மட்டுமே தவிர செயலில் அன்று..!!







