மா/இரத்/கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலயம், அல்வத்த
பாடசாலை வரலாறு
இயற்கை எழில் கொஞ்சும் மலையகத்திலே நன்முத்தாம் பன்னாகப் பதியிலிருந்து சுமார் பதினாறு கிலோமீற்றர் தூரத்திலே மா/இரத்/கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலயம் அமைந்துள்ளது. 1933ம் ஆண்டு தொடக்கம் 1977ம் ஆண்டு வரை தோட்ட நிர்வாகப் பாடசாலையாக செயற்பட்டது. தோட்ட நிர்வாகியாகிய ஜனாப் எம். மீஸான் அவர்களால் ஐந்து ஏக்கர் நிலம் பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. ஆரம்பகாலம் தொட்டு 1977 வரை பாடசாலையானது பழைய கட்டடம் ஒன்றில் மிகக் குறைவான மாணவர் தொகையுடன் பற்றாக்குறையான ஆசிரிய பௌதீக வளங்களுடன் செயற்பட்டது. 1977 ம் ஆண்டு பாடசாலை அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது.
1985ம் ஆண்டு சீடா திட்ட அமைப்பினால் பாடசாலைக்கான கட்டடங்கள் இரண்டு கிடைக்கப்பெற்றது. 20×80 சதுர அடிக்கட்டடம் ஒன்றும் 20X100 சதுர அடிக்கட்டம் ஒன்றும் என இரண்டு கட்டடங்கள் கிடைக்கப்பெற்றது. 1987 ம் ஆண்டு அமரர் கௌரவ தொண்டமான் அமைச்சரால் 20X100 சதுர அடிக்கட்டடம் ஒன்றும் 30×20 கட்டடம் 20×60 சதுர அடிக்கட்டடம் ஒன்றும் கிடைக்கப்பெற்றது. 20 20 சதுர அடிக்கட்டடம் 2010 ஆண்டு அரச நிதி மூலம் கிடைக்கப் பெற்றது. 2012 ம் ஆணடு மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு நிதியிலிருந்து 25 × 100 சதுர அடி கட்டடம் ஒன்று பாடசாலைக்கு கிடைக்கப் பெற்றது. 1989ல் பாடசாலை அபிவிருத்திச் சபையின் உதவியுடனும் பெற்றோரின் ஒத்துழைப்புடனும் பாடசாலைக்கான விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது. ஐந்து ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பாடசாலைக்கான காணிக்கு முள்ளுக் கம்பி வேலி இடப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. 1991ம் ஆண்டு தோட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் இரண்டு கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள மலை ஊற்று நீர் நிலையிலிருந்து குழாய் மூலம் பாடசாலைக்கான நீர் வசதி கிடைக்கப் பெற்றது. 1987 ஆண்டு போர்வூட் நிறுவனத்தால் மலசல கூடத் தொகுதி கிடைக்கப் பெற்றது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
1978ம் ஆண்டு வரை ஐம்பத்தேழு மாணவர்களும் 20 கதிரைகளும் 21 மேசைகளும் பற்றாக்குறையான ஆசிரிய வள நிலையிலே பாடசாலை இயங்கி வந்தது. 1989 ம் ஆண்டு அமரர் கௌரவ அமைச்சர் சௌ. தொண்டமான் அவர்களின் பரிந்துரையின் பெயரில் பாடசாலை தரம் 9 வகுப்பு வரையான அனுமதியைப பெற்றுக் கொண்டது. இக்கால கட்டத்தில் இருநூற்றி ஐம்பது மாணவர்களும் ஐந்து ஆசிரியர்களும் காணப்பட்டனர். 1999ம் ஆண்டு 07 ஆசிரியர்களும் 325 மாணவர்களும் என்ற நிலையிலும் 1991 ம் ஆண்டு 10 ஆசிரியர்களும் 450 மாணவர்களும் என்ற நிலையில உயர்வு கண்டது.
1992ம் ஆண்டு 13 ஆசிரியர்களும் 540 மாணவர்களம் காணப்பட்டனர். 2013ம் ஆண்டில் இருபத்தாறு ஆசிரியர்களும் 465 மாணவர்களும் காணப்படுகின்றனர். 1993ம் ஆண்டு தொடக்கம் க.பொ.த (சாதாரணப்) பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பினை மாணவர்கள் பெற்றுக் கொண்டனர் 2004 ம் ஆண்டு க.பொ.த உயர்தரம் கலைப்பிரிவு வகுப்புக்கான அனுமதி கிடைக்கப் பெற்று 2006 ம் ஆண்டு முதன் முதலாக மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பொதுப் பரீட்சைக்கு தோற்றும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டனர். திருமதி M.A.C. ஜெயனம்பு, திருமதி M. ஹெட்டியாராய்ச்சி, திருமதி B.J.பெனடிக்ட், திருமதி ராணிகுணபாலா, திரு A. ரங்கன், அமரர்.திரு.A.S.இராதாக்கிருஸ்ணன் ஆகியோர் அதிபர்களாகக் கடமையாற்றிப் பாடசாலையின் வளர்ச்சியில் உந்து சக்தியாக தொழிற்பட்டனர். தற்பொழுது திருமதி B.இரவீந்திரன் அவர்கள் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார். பாடசாலையானது கல்வி நிலையிலும் விளையாட்டுத் துறையிலும் ப்பாட இணைவிதான செயற்பாடுகளிலும் புறக்கிருத்தியச் செயற்பாடுகளிலும் சிறப்பான நிலையினை எட்டி தொடர்ந்தும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் முன்னனிப் பாடசாலையாக விளங்கி வருகின்றது.
1990ம் ஆண்டு முதன் முதலாக ஆண்டு 5 புலமைப்பரீட்சையில் செல்வன் S. பெரியய்யா என்ற மாணவன் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமையினை ஈட்டித்தந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 2011ம் ஆண்டு க.பொ.த உயர்தரக்கலைப்பிரிவு பொதுப்பரீட்சையில் தோற்றிய செல்வி P.உஷாந்தினி, செல்வி S. யுவராணி ஆகிய இரு மாணவிகள் முதன் முதலாக நுண்கலை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி பாடசாலைக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளனர். 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற மத்தியமாகாண சாகித்திய விழாவில் வெற்றிக்கேடயத்தைப் பெற்றுக் கொண்டதுடன் வருடா வருடம் நடாத்தப்பட்ட வரும் தமிழ்த் தினப்போட்டி, வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் அதிகளவான மாணவர்கள் பங்குபற்றி வலய மட்ட மாகாண மட்ட நிலைக்கான பரிசில்கள் சான்றிதழ்களைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையான விவசாய வீட்டுத்தோட்டப் போட்டிகளிலும் கலாசார நிகழ்வுப்போட்டிகளிலும் மாணவர்கள் பங்கு பற்றி வெற்றிகள் பல பெற்று பாடசாலை கீர்த்திக்கு உறுதுணை புரிந்து வருகின்றனர்.
2013ம் ஆண்டு ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வாசிப்புத்திறனை வளம் செய்யும் வகையில் Room To Read நிறுவனத்தினால் நூல் நிலையம் ஒன்று பாடசாலை வளாகத்தினுள் அமைவு பெற்று செயற்பட்டு வருகின்றது. மாணவர்களின் கல்வி, ஆளுமை விருத்தியினை மேம்படுத்தும் வகையில் 17 வகையான மன்றங்கள் செயற்பட்டு வருகின்றன. வருடாவருடம் இல்ல விளையாட்டுப் போட்டிகள் சமய விழாக்கள், சிறுவர்தினம், ஆசிரியதினம் போன்ற விழா நிகழ்வுகள் வெகு விமர்சையாக நடாத்தப்பட்டு வருகின்றன. இந்து மாமன்றம் ஊடாக 'இந்துச்சுடர்' சஞ்சிகையும் தமிழ் இலக்கிய மன்றத்தினூடாக 'பொக்கிஷம்' என்ற சஞ்சிகையும் வெளியீடு செய்யப்பட்டது. பாடசாலை எதிர்கால இலக்கு வலய மட்டத்தில் முன்னனி பாடசாலையாக உருப்பெறுவதும் கற்ற பண்புள்ள சமூக நோக்கும் தேசப்பற்றும் உள்ள மாணவ சமுதாயத்தை உருவாக்குவதுமாகும். இந்த வகையில் பாடசாலையின் செயற்பாடுகள் நகர்வு பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
2012 ம் ஆண்டு க.பொ.த. உயர்தர கலைப் பிரிவிற்கான பெறுபேறுகளின் அடிப்படையில் செல்வி.S.யசந்தினி, A.சுபாஷினி நுண்கலைப் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியமை சிறப்பம்சமாகும். அதே ஆண்டில் செல்வி S.மனோரஞ்சினி யாழ்ப்பாணப் பல்கலைகழகத்திற்கு முதன் முதலாக இந்துநாகரிகம் மெய்யியல் பாடநெறிக்குத் தெரிசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 2012 ம் ஆண்டு அரசினது ஆயிரம் பாடசாலைத் வேலைத்திட்டத்தின் நடவடிக்கைகளுக்கு அமைய 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தரம் 1 முதல் 5 வரையான ஆரம்ப பிரிவிற்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக புதியதொரு பாடசாலையான கணபதி ஆரம்ப பாடசாலை என்ற பெயரில் பாடசாலை வளாகத்தின் ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் மா/இரத்/கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலத்தின் ஊட்டபாடசாலைகளில் ஒன்றாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
2012 ம் ஆண்டு க.பொ.த. உயர்தர கலைப் பிரிவிற்கான பெறுபேறுகளின் அடிப்படையில் செல்வி.S.யசந்தினி, A.சுபாஷினி நுண்கலைப் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியமை சிறப்பம்சமாகும். அதே ஆண்டில் செல்வி S.மனோரஞ்சினி யாழ்ப்பாணப் பல்கலைகழகத்திற்கு முதன் முதலாக இந்துநாகரிகம் மெய்யியல் பாடநெறிக்குத் தெரிசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 2012 ம் ஆண்டு அரசினது ஆயிரம் பாடசாலைத் வேலைத்திட்டத்தின் நடவடிக்கைகளுக்கு அமைய 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தரம் 1 முதல் 5 வரையான ஆரம்ப பிரிவிற்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக புதியதொரு பாடசாலையான கணபதி ஆரம்ப பாடசாலை என்ற பெயரில் பாடசாலை வளாகத்தின் ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் மா/இரத்/கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலத்தின் ஊட்டபாடசாலைகளில் ஒன்றாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.













